TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய இரண்டாவது கைபேசி உற்பத்தியாளர்

April 9 , 2018 2295 days 676 0
  • சீனாவிற்கு அடுத்தபடியாக, வியட்நாமை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய கைபேசி (Mobile Phones) உற்பத்தியாளர் நாடாக இந்தியா உருவாகியுள்ளது.
  • இந்திய செல்லுலார் அசோசியேஷன் (Indian Cellular Association-ICA) அமைப்பினால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
  • இந்தத் தகவலின் படி இந்தியாவில் வருடாந்திர கைபேசி உற்பத்தியின் அளவு  அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 3 மில்லியன் யூனிட்டுகள் என்றிருந்த உற்பத்தி அளவானது 2017ல் 11 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
  • இந்திய செல்லுலார் அசோசியேஷனால் பகிரப்பட்டுள்ள தரவுகளின் படி 2014 ஆம் ஆண்டின் 3 சதவீதத்தை ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் உலக கைபேசி உற்பத்தியில் 11 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது.
  • சீனா, இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகள் உலகின் முதல் மூன்று கைபேசி உற்பத்தியாளர் நாடுகளாகும்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப   (Ministry of Electronics and IT)   அமைச்சகத்தின் கீழ் அரசு Fast Track Task Force (FTTF) என்ற அமைப்பைத் துவங்கியுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 500 மில்லியன் கைபேசிகளின் உற்பத்தியினை அடைய இலக்கினை நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்