TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய கடல் உணவு ஏற்றுமதியாளர்- இந்தியா

August 26 , 2017 2680 days 1406 0
  • குளோப் பிஷ் (Globe Fish) என்பது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization of the United Nations - FAO) ஒரு அங்கம் ஆகும். இது சர்வதேச மீன் வர்த்தகம் மற்றும் சந்தைகள் மீதான தகவல் மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்கிறது.
  • குளோப் பிஷ் நிறுவனத்தின் அறிக்கையில் இறால், சூரை மீன் , சால்மன் மீன் போன்ற 14 முக்கியமான கடல் உணவுகளைப் பற்றிய விரிவான புள்ளிவிவரங்கள் இடம்பெறுகின்றது.
  • இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி , 2016 ஆம் ஆண்டின் மிகப்பெரும் கடல் உணவு ஏற்றுமதியாளர் இந்தியா ஆகும்.
  • இறால் ஏற்றுமதியில் முதல் ஐந்து இடம் வகிக்கும் நாடுகள் முறையே இந்தியா, வியட்நாம், ஈக்வடார் , இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகியவை ஆகும்.
  • அமெரிக்கா , வியட்நாம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இந்தியா அதிகப்படியாக கடல் உணவு ஏற்றுமதி செய்கின்றது.
  • உலகில் அதிகமாக மீன் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் வகிக்கிறது . உலகில் உற்பத்தி செய்யப்படும் மீன்களில் சுமார் 6 சதவீதம் மீன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மீன் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
  • இத்தாலி ரோமைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் ஊட்ட நலனை அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், வேளாண்மை மற்றும் உணவுப் பொருட் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினியை நீக்கப் பாடுபடுகின்றது.
  • 1945 இல் இவ்வமைப்பானது கனடாவில் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
 
  • மொத்தம் உறுப்பினர்கள்: 197
    • 194 உறுப்பினர் நாடுகள்
    • 1 உறுப்பினர் அமைப்பு (ஐரோப்பிய ஒன்றியம்)
    • 2 இணை உறுப்பினர்கள் (ஃபாரோ தீவுகள் மற்றும் டோக்கெலாவ்)
  • உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், கோடெக்ஸ் அளிமென்டரி (Codex Alimentarius) , சர்வதேசத் தாவரப் பாதுகாப்பு ஒப்பந்தம் (International Plant Protection Convention-IPPC) போன்ற முக்கியமான திட்டங்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு செயல்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்