வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதற்காக வடிவமைக்கப் பட்ட உலகின் மிகப்பெரிய மையமானது ஐஸ்லாந்தில் செயல்படத் தொடங்கியது.
"மாமோத்" என்று அழைக்கப்படுகின்ற இந்த ஆலையானது, கிளைம்வொர்க்ஸ் என்ற நிறுவனத்தின் இரண்டாவது வணிக ரீதியான நேரடி காற்றுப் பிடிப்பு ஆலை ஆகும்.
இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் ஆனது காற்றை இழுத்து, வேதியியல் முறையில் கார்பன் டை ஆக்சைடைப் பிரித்தெடுத்து, பின்னர் அதை நிலத்தடியில் சேமித்து, கல்லாக மாற்றும் அல்லது மீண்டும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றும்.
க்ளைம்வொர்க்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் மாமோத் நேரடி காற்றுப் பிடிப்பு மற்றும் சேமிப்பு (DAC+S) ஆலையானது, சுவிஸ் நிறுவனத்தின் ஓர்கா எனப்படும் முந்தைய ஆலையை விட 10 மடங்கு பெரியதாகும்.