TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி சொத்துக்கள்

September 5 , 2020 1452 days 638 0
  • மெர்கோம் கேப்பிட்டல் என்ற நிறுவனமானது செயல்பட்டு வரும் திட்டங்கள், கட்டமைக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப் புள்ளி வழங்கப் பட்டத் திட்டங்கள் என்ற அடிப்படையில் அதானி பசுமை ஆற்றல் உற்பத்தி நிறுவனத்தை (AGEL - Adani Green Energy Ltd) உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி சொத்துக்கள் கொண்டுள்ள நிறுவனமாக தரவரிசைப் படுத்தியுள்ளது.
  • AGEL நிறுவனத்தின் கட்டமைக்கப்பட்டு வரும் மற்றும் ஒப்பந்தப் புள்ளி பெற்றுள்ள திறனானது 10.1 ஜிகாவாட் ஆக உள்ளது. அதன் செயல்படும் திறனானது ஏறத்தாழ 3 ஜிகாவாட் ஆக உள்ளது.
  • அதானி குழுமத்தின் ஒட்டு மொத்தத் திறன் 12.32 ஜிகாவாட் ஆக உள்ளது. இது 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அமைக்கப் பட்டுள்ள மொத்தத் திறனை விட அதிகமாகும்.
  • அதானி நிறுவனம் தனது முதலாவது சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தை 2015 ஆம் ஆண்டில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்