TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய சூரிய வெப்ப ஆலை

January 14 , 2018 2379 days 781 0
  • தென் ஆஸ்திரேலிய அரசாங்கமானது உலகின் மிகப்பெரிய சூரிய வெப்ப ஆலையை மேம்படுத்துவத்துவதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.
  • பயன்பாட்டு அளவிலான சூரிய ஒளி ஆற்றல் நிறுவனமான சோலார் ரிசர்வ் (Solar Reserve) மூலம் கட்டப்படும் 150 மெகாவாட் அரோரா ஆலையின் மீதான கட்டுமானப் பணிகள் 509 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்படும்.
  • இந்தப் புதிய கட்டுமானப் பகுதியானது தெற்கு ஆஸ்திரேலியாவின் கடைசி நிலக்கரி மின் நிலையத்தின் தளமான போர்ட் அகஸ்டாவுக்கு அருகே அமையவுள்ளது.
  • இது சூரிய வெப்ப தொழில்நுட்பத்தையும், உருகிய உப்பு கோபுரத்தையும் பயன்படுத்தி சூரிய ஆற்றலைக் கைப்பற்றி சேமிக்கின்றது.
  • இந்தப் புதிய ஆலையானது தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து குடியிருப்புக்களில், 35 சதவீதத்தினருக்கு மின் ஆற்றல் வழங்கும்.
  • இது அதிக மின் தேவையைக் கொண்ட கோடைக் காலத்தின் போது மாநில மின்சார விநியோகத்தின் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டெஸ்லா என்ற நிறுவனத்தால் கட்டப்பட்ட மிகப்பெரிய லித்தியம் அயான் மின்கலத்துடன் (Li-ionBattery) சேர்ந்து தெற்கு ஆஸ்திரேலியாவின் மற்றொரு பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டமாக இணைய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்