TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்கா

March 3 , 2018 2332 days 757 0
  • கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டத்திலுள்ள பவகடா தாலுக்காவில் அமைந்துள்ள சக்தி ஸ்தலம் உலகின் மிகப்பெரிய சூரியசக்தி பூங்காவாக உருவெடுத்துள்ளது. இப்பூங்கா, கர்நாடக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • முதல் கட்டமாக இந்தப் பூங்காவில் 600MW மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2019ல் இரண்டாவது கட்டமாக 1400 MW மின் உற்பத்தி இதில் தொடங்கப்படும்.
  • முழுவதுமாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இந்த சூரியசக்தி பூங்கா 2000 MW மின் உற்பத்தி செய்யும். தற்போது வரை உலகின் மிகப் பெரிய சூரியசக்தி பூங்காவாக சீனாவிலுள்ள டென்கர் பாலைவன சூரியசக்தி பூங்கா இருந்து வந்தது.
  • இந்த கர்நாடக சூரியசக்தி பூங்காவின் தனிச் சிறப்பு என்பது, இந்த பூங்கா அமைப்பதற்கான நிலம் உள்ளூர் மக்களிடமிருந்து 25 ஆண்டுகளுக்கு குத்தகையாகப் பெறப்பட்டது. ஆனால் பொதுவாக நிலம் கையகப்படுத்தலே நடைமுறையில் உள்ளது.
  • கர்நாடக புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய சூரியசக்தி ஆற்றல் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்ட கர்நாடக ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் தொடக்கமே (initiative) இந்தப் பூங்கா அமைப்பாகும்.
  • இந்த சூரியசக்தித் திட்டமானது கர்நாடக சூரியசக்திக் கொள்கை 2014 – 2021ன் ஒரு பகுதியாகும்.
  • கர்நாடகா, இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்