கூட்டுறவுத் துறையில் உலகின் மிகவும் பெரியதான தானியச் சேமிப்புத் திட்டத்தின் சோதனைக் கட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் உள்ள முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களில் (PACS) வெற்றிகரமாகச் சேமிப்புக் கிடங்குகள் கட்டமைக்கப் பட்டுள்ளன.
இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் இராஜஸ்தான் ஆகியவை அடங்கும்.
இது 9,750 மெட்ரிக் டன் என்ற மொத்தச் சேமிப்புத் திறனை எட்டியுள்ளது.
தற்போது அரசாங்கமானது, நாடு முழுவதும் கூடுதலாக சுமார் 500க்கும் மேற்பட்ட PACS சங்கங்களுக்கு இத்திட்டத்தினை விரிவுபடுத்தியுள்ளது.