TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தெருவிளக்குகள் மேலாண்மை நிறுவனம்

August 20 , 2017 2685 days 989 0
  • தேசியத் தெரு விளக்குகள் திட்டம் மூலமாகச் சுமார் 50 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்திய சாலைகளில் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட எல்.ஈ.டி (LED) தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது .
  • இதன் மூலமாக , இந்தத் திட்டங்களைச் செயல்படுத்திய எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் (Energy Efficiency Services Limited - EESL) உலகின் மிகப்பெரிய தெரு விளக்கு மேலாண்மை நிறுவனம் என்ற பெருமையினைப் பெற்றுள்ளது.
  • எல்.ஈ.டி விளக்குகள் குறைந்த மின்சாரச் செலவில் இயங்குபவை ஆகும். இத்தகைய எல்.ஈ.டி தெருவிளக்குகள் நிறுவப்பட்டதன் மூலம் 39 கோடி கிலோவாட் மணிநேரம் (390,000,000 kW⋅h) அளவிலான மின் ஆற்றல் சேமிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டங்களின் மூலமாக இந்தியாவில் சுமார் 29 இலட்சம் டன் கரியமில வளிம வெளிப்பாடு குறைக்கப்பட்டுள்ளது என்று எரிசக்தி அமைச்ககத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்