TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் பாகங்கள் உற்பத்தி

September 22 , 2020 1436 days 641 0
  • உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியானது இந்தியாவின் டாடா கன்சல்டன்சி நிறுவனத்தினால் (TCS - Tata Consultancy Services) இந்தியாவில் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுக் கட்டமைக்கப் படுகின்றது.
  • TCS தலைமையின் கீழ் செயல்படும் இந்தத் திட்டத்திற்கு முன்னணியில் உள்ள பல்வேறு இந்திய அறிவியல் நிறுவனங்கள் இணைந்து பங்காற்றுகின்றன.
  • டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் கீழ் செயல்படும் தேசிய ரேடியோ வான் இயற்பியல் மையமானது இந்தத் திட்டத்தின் தலைமை மேலாளராகச் செயல்படுகின்றது.
  • இந்தத் தொலைநோக்கியானதுசதுர கிலோமீட்டர் தொகுப்பு” (SKA - square kilometre array) என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்தத் தொலைநோக்கியானது தென் ஆப்பிரிக்காவில் கட்டமைக்கப்பட உள்ளது.
  • இதன் இதர வெளி நிலையங்கள் கானா, போட்ஸ்வானா, கென்யா, மொரீஷியஸ், மடகாஸ்கர், மொசாம்பிக், ஜாம்பியா மற்றும் நமீபியா ஆகிய இதர 8 பங்காளர் நாடுகளில் அமையவுள்ளது.
  • இந்தத் தொலைநோக்கியின் குறைந்த அதிர்வெண் வரிசையானது மேற்கு ஆஸ்திரேலியாவில் கட்டமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்