TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய நிரந்தர உறைபனி பள்ளம்

May 11 , 2024 68 days 191 0
  • உலகின் மற்ற பகுதிகளை விட ரஷ்யா குறைந்தது சுமார் 2.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
  • "பாதாள உலகத்தின் நுழைவாயில்" என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரியப் பள்ளங்களில் ஒன்று ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் கன அடியாக விரிவடைந்து வருகிறது.
  • செர்பியாவின் நிரந்தர உறைபனி அமைப்பில் அமைந்துள்ள பெரிய பள்ளம் ஆனது அதன் நிலத்தடி உறைபனி உருகுவதால் விரிவடைந்து வருகிறது.
  • அதிகாரப்பூர்வமாக படகே (படகைகா) என்று அழைக்கப்படும் இந்தப் பள்ளம் அல்லது மாபெரும் சரிவு என்பது 1991 ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் படங்கள் மூலம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வட்டமான செங்குத்துப் பாறை அமைப்பாகும்.
  • ரஷ்யாவின் வடக்கு யாகுடியாவின் யானா உயர்மலைப் பகுதியில், மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இது உருவானது.
  • 650,000 ஆண்டுகள் வரை உறைந்து கிடக்கும் மலைச்சரிவின் எஞ்சிய பகுதிக்குள் காணப்படும் நிரந்தர உறைபனி அடுக்குகளை இந்த சரிவு வெளிக்கொணர்ந்தது.
  • இது சைபீரியாவில் உள்ள மிகப் பழமையான நிரந்தர உறைபனி என்றும், உலகின் இரண்டாவது பழமையானது என்றும் அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்