சீனாவின் சொந்தத் தயாரிப்பான AG-600 என்று பெயரிடப்பட்ட குன்லாங் எனப்படும் உலகின் மிகப்பெரிய நீர்நில விமானம் தெற்கு நகரமான ஜீஹாயில் பயணிக்க ஆரம்பித்து அரை மணி நேரப் பயணத்திற்குப் பின் தரை இறங்கியது.
இந்த வெற்றிகரமான, முதல் பயணம் சீனாவை மிகப்பெரிய நீர்நில விமானங்கள் தயாரிக்கும் உலகில் மிகச்சில நாடுகளுள் ஒன்றாக தக்க வைக்கிறது.
இந்த நீர்நில விமானம் இராணுவப் பயன்பாடுகளோடு தீயணைப்பு மற்றும் கடல் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படும்.
AG 600 நீர்நில விமானம்8 மீட்டர் நீளமான இறக்கைகளுடன் நீரிலிருந்து பறக்கவும் இறங்கவும் செய்யும். இது நான்கு டர்போ இயந்திரங்கள் மூலம் வலுவாக்கப்பட்டுள்ளது.
இதை வடிவமைத்து தயாரித்தது சீனாவின் அரசு நிறுவனமான சீன வானூர்தி தொழிற்சாலை நிறுவனம் ஆகும்.