TNPSC Thervupettagam

உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் வம்சம்

December 19 , 2017 2531 days 927 0
  • உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் மக்கள் தொகையை இந்தியா பெற்றுள்ளது.
  • ஐ.நா. சபையின் இடப்பெயர்ச்சியின் போக்குகளுக்கான அறிக்கையின் படி 16 மில்லியன் இந்தியர்கள் தங்கள் பிறந்த நாட்டை விட்டு வெளியே வசிக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றது.
  • ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான துறையின் மூலம் எடுக்கப்பட்ட இந்த ஆராய்ச்சியானது உலகில் தங்கள் பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் வசிப்பவர்கள் என்ற வகையில் 224 மில்லியன் மக்கள் சர்வதேச புலம்பெயர் மக்களாக வசிக்கின்றனர் எனக் கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவின் செழிப்பான புலம்பெயர் மக்கள்தொகை அமெரிக்காவில் இருப்பதாகவும், 2015-ல் இவர்கள் மூன்றாவது மிகப்பெரிய தனி இனமாகவும், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தை உடையதாகவும் உள்ளனர்.
  • 12 மில்லியன் புலம்பெயர் மக்கள் தொகையைக் கொண்டு மெக்ஸிகோ இரண்டாவது இடத்திலும், அதற்கடுத்த இடங்களில் ரஷ்யாவும், சீனாவும் உள்ளன.
  • இந்திய புலம்பெயர் மக்கள் தொகை ,அதாவது தங்கள் பிறந்த இடத்தை விட்டு வேறு நாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் தொகை உலகின் ஒட்டு மொத்த புலம்பெயர் மக்கள் தொகையில் 6 சதவீதத்தை உடையதாகவும், 2015ல் இது 243 மில்லியன் மக்கள் தொகை எனவும் கணக்கிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்