சுமார் இரண்டு ஆண்டு கால அளவிலான போரானது, சூடானை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் மூழ்கடித்துள்ளது.
இது அந்த ஆப்பிரிக்க நாட்டைப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் ஒரு நாடாக மாற்றி உள்ளது.
சுமார் 25 மில்லியன் மக்கள் அதாவது, சூடானின் மக்கள்தொகையில் பாதி பேர் மிக கடுமையான பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.
சூடான நாட்டின் இராணுவம் மற்றும் துணை இராணுவ அமைப்பின் தலைவர்களுக்கு இடையே மிக நீண்ட காலமாக நீடித்து வந்த பதட்ட நிலை மூண்டெழுந்ததையடுத்து, சூடான் நாடானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதியன்று மோதலில் மூழ்கியது.
அப்போதிலிருந்து, குறைந்தது 20,000 பேர் கொல்லப் பட்டதாகக் கூறப்படுகிறது.