உலகின் மிகப்பெரிய ராணுவச் செலவினம் கொண்ட நாடு 2025
February 21 , 2025 2 days 46 0
2024 ஆம் ஆண்டில் உலகளாவியப் பாதுகாப்பு செலவினங்கள் சுமார் 2.46 டிரில்லியன் டாலரை எட்டின.
இது முந்தைய ஆண்டில் பதிவான 2.24 டிரில்லியன் டாலரிலிருந்து அதிகரிப்பினைக் குறிக்கிறது என்பதோடு இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக நாடுகளின் சராசரி பாதுகாப்புச் செலவினத்தினை 1.9% ஆக உயர்த்தியுள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் 1.6% ஆகவும், 2023 ஆம் ஆண்டில் 1.8% ஆகவும் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய ராணுவச் செலவினம் கொண்ட நாடாக உள்ளது.
இப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணி வகிப்பது மட்டுமல்லாமல், உலகின் முதல் ஐந்து ராணுவச் செலவினங்களில் 62.3 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை முறையே 18.6 சதவீதம் மற்றும் 8.8 சதவீதப் பங்குடன் அமெரிக்காவைத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
இந்த உலகளாவிய ஆயுதக் குறியீட்டில் நான்காவது இடத்தில் இடம் பெற்றுள்ளதுடன், இந்தியா உலகின் முன்னணி ராணுவ சக்திகளில் ஒன்றாக அங்கீகரிக்கப் பட்டு உள்ளது.
2025 ஆம் நிதியாண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், அரசாங்கம் ஆனது பாதுகாப்பு அமைச்சகத்திற்காக 6.81 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இது ஒட்டு மொத்த மத்திய நிதிநிலை அறிக்கையில் 13.45% ஆகும்.
இது அரசாங்க அமைச்சகங்களுக்கு வழங்கப் பட்டவற்றுள் மிக அதிக ஒரு ஒதுக்கீடாக கருதப் படுகிறது.