- சமீபத்தில் சதுர கிலோ மீட்டர் தொகுப்பு ஆய்வகம் (Square Kilometre Array Observatory - SKAO) என்ற மன்றமானது சமீபத்தில் தனது சந்திப்பை நடத்தியது.
- இந்தச் சந்திப்பின் போது, இந்த ஆணையமானது உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
- SKAO என்பது அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு புதிய அமைப்பாகும்.
- தற்பொழுது SKAO ஆனது 10 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளைக் கொண்டுள்ளது.
அமைக்கப்பட இருக்கும் ரேடியோ தொலைநோக்கி
- இதை காஸ்மிக் துகள்களால் மூடப்பட்டுள்ள விண்வெளிப் பகுதிகளை (இதுவரை கண்டறியப் படாத) கண்டறியவும் கண்ணுக்குப் புலப்படாத வாயுக்களைக் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.
- மேற்கண்டவை தொடர்பான வழக்கமான ஒளியிழைத் தொலைநோக்கிகளைக் காட்டிலும் இது வேறுபட்டதாகும்.
- சதுர கிலோ மீட்டர் தொகுப்பு என்பது உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கியாகும்.
- இந்த தொலைநோக்கியானது ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் அமைக்கப் படவுள்ளது.