ருமேனியா நாட்டில் உருவாக்கப்பட்ட உலகின் மிகவும் சக்திவாய்ந்த சீரொளிக் கற்றையினை பொறியாளர் அன்டோனியா டோமா செயல்படுத்தினார்.
இந்த சீரொளிக் கற்றையானது சுகாதாரத் துறை முதல் விண்வெளி வரையிலான அனைத்து துறைகளிலும் புரட்சிகரமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும்.
சீரொளிக் கற்றையின் பல்வேறு கூர்மையான கதிர்கள்உலகை குறித்த ஆழ்ந்த பரந்த தகவலைப் பெறவும், அதை மேலும் நன்கு செம்மைப்படுத்தவும் புதிய வாய்ப்புகளைத் தருகின்றன.
இந்த அமைப்பு ஆனது ஒரு ஃபெம்டோசெகண்ட் (ஒரு பில்லியன் வினாடிக்கு ஒரு மில்லியனில் ஒரு பங்கு) என்ற வரிசையில் மிகக் குறுகிய காலத்திற்கு 10 பெட்டாவாட் (10 முதல் 15 வாட்ஸ் திறன்) என்ற அதிகபட்ச அளவை அடையும் திறன் கொண்டது.