TNPSC Thervupettagam

உலகின் மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனம்

January 22 , 2018 2400 days 703 0
  • மாபெரும் தொழிற்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 2018ம் ஆண்டிற்கான பார்ச்சூயூன் இதழின் உலகின் மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் ('World's Most Admired Companies' for 2018) முதலிடம் பிடித்துள்ளது.
  • தொடர்ந்து 11வது ஆண்டாக பார்ச்சூயூன் இதழின் இத்தகு பட்டியலில் ஆப்பிள் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
  • பெரும் மின்-வர்த்தக நிறுவனமான அமேசான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளது.
  • உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இவ்வாண்டு இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் எதையும் பெறாமல் 12வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்