உலக சுகாதார நிறுவனத்தினால் (World Health Organization-WHO) அண்மையில் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய நகர்புறகாற்று மாசுபாடு தரவுதளத்தின்படி (Global Urban Air Pollution database), 2016-ஆம் ஆண்டு உலக நகரங்களின் சுற்றுப்புறத்தில் நிலவிய5 நுண் மாசுத் துகள்களின் (Particulate Matter-PM 2.5) அளவின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 இந்திய நகரங்களாவன: டெல்லி, வாரணாசி, கான்பூர், பரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, முஜாபர்பூர், ஸ்ரீநகர், கூர்கான், ஜெய்ப்பூர், பாட்டியாலா, ஜோத்பூர் ஆகியனவாகும்.
இப்பட்டியலில் குவைத் நாட்டின் அலி சுபாவர் அல்-சலேம் (Ali Subah Al-Salem) நகரம் மற்றும் சீனா மற்றும் மங்கோலியாவின் சில நகரங்களை அடுத்து இந்த 14 இந்திய நகரங்கள் காணப்படுகின்றன.
நுண்மாசுத் துகள்கள் 10 (PARTICULATE MATTER -PM 10) அளவின் அடிப்படையில் உலகின் மிகவும் மாசுபாடடைந்த 20 நகரங்கள் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
14 மில்லியன் அல்லது அதற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மெகா நகரங்களின் காற்றுத்தரம் குறித்த தரவுகளை (air quality data for mega-cities) உலக சுகாதார நிறுவனம் தொகுத்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தினுடைய இந்த அறிக்கையில் உள்ள புதிய தரவுகளானது, உயர்ந்த அளவில் மாசுபடுத்திகளைக் (pollutants) கொண்ட காற்றினை உலகில் 10 நபர்களுள் 9பேர் சுவாசிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.
மாசுபட்ட காற்றில் உள்ள நுண் துகள்களானது சுவாசித்தலின் மூலம் மனிதர்களின் நுரையீரல், இருதய வால்வு அமைப்புகளில் ஆழமாக உட்புகுகின்றன. இவை இருதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அடைப்பு நோய்கள், நிமோனியா உட்பட பிறசுவாச கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
உலக சுகாதார நிறுவனமானது காற்று மாசுபாட்டை தொற்றா நோய்களுக்கு முக்கியமான ஆபத்து காரணியாகஅ ங்கீகரித்துள்ளது (critical risk factor for non-communicable diseases).
காற்று மாசுபாடானது வயதுவந்தோரில் இருதயநோய்களினால் 24சதவீதத்தினரின் இறப்புக்கும், நுரையீரல் தடுப்பு சுவாச நோய்களினால் (chronic obstructive pulmonary disease) 43 சதவீதத்தினரின் இறப்புக்கும், நுரையீரல் புற்றுநோயினால் 29 சதவீதத்தினரின் இறப்புக்கும் காரணமாகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.