TNPSC Thervupettagam

உலகின் மீன் உற்பத்தி

March 26 , 2020 1578 days 500 0
  • இந்தியா உலகில் மீன்வளர்ப்பு மூலம் மீன் உற்பத்தி செய்யும் ஒரு முக்கியமான நாடாகும்.
  • மீன்களின் உலகளாவியப் பன்முகத் தன்மையில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளன.
  • ஓர் ஆண்டிற்கான  மீன் உற்பத்தியானது சுமார் 9.06 மில்லியன் மெட்ரிக் டன்னுடன், உலகின் மொத்த மீன் உற்பத்தியில் தற்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மீன்வளர்ப்பு உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவின் உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவற்றின் பங்கு மொத்த மீன் உற்பத்தியில் 1980 ஆம் ஆண்டுகளில் 46 சதவீதத்திலிருந்து சமீபத்திய ஆண்டுகளில் 85 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • இந்தியாவின் மீன்வளர்ப்பு உற்பத்தியை நன்னீர் மற்றும் உவர் நீர் உற்பத்தி என வகைப்படுத்தலாம்.
  • நன்னீர் மீன் உற்பத்தியானது மொத்த மீன்வளர்ப்பு உற்பத்தியில் 95 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்