TNPSC Thervupettagam

உலகின் முதலாவது துவரம்பருப்பு உற்பத்தி விரைவாக்க நெறிமுறை

February 26 , 2024 144 days 242 0
  • பகுதியளவு வறட்சியான வெப்ப மண்டலத்திற்கான சர்வதேசப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) ஆனது உலகின் முதல் துவரம்பருப்பு உற்பத்தி விரைவாக்க நெறி முறையை அறிவித்துள்ளது.
  • இந்த புதிய துவரம்பருப்பு உற்பத்தித் திட்டம் ஆனது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வறண்ட நிலங்களில் உணவுப் பாதுகாப்பைக் கொண்டு வருவதில் முக்கியமானதாக இருக்கும்.
  • இதன் மூலம் சுமார் ஏழு ஆண்டுகள் ஆகும் இந்தப் பயிரின் வளர்ப்பு காலச் சுழற்சியை இரண்டு முதல் நான்கு ஆண்டுகளாக குறைக்கலாம்.
  • துவரம் பருப்பானது அடிப்படையில் ஆறு-முதல் ஒன்பது மாதம் வரை வளர்ச்சி காலம் கொண்ட பயிர் ஆகும்.
  • அறிவியலாளர்கள் இந்தத் தாவரத்தின் வளர்ச்சிக் காலத்தினை மிக வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, முன்கூட்டியே பூக்களைப் பூக்கச் செய்தனர்.
  • துவரம் பருப்பில் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக் கொண்டுள்ளது.
  • மேலும் இதில் தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் B-6, ஃபோலேட், வைட்டமின் A, கால்சியம், துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்