TNPSC Thervupettagam

உலகின் முதலாவது முழு உடல் ஸ்கேன் கருவி

December 1 , 2018 2186 days 657 0
  • 20-30 வினாடிகளுக்குள் முழு மனித உடலையும் முதலாவது முறையிலேயே ஸ்கேன் செய்து முப்பரிமாணப் படத்தை பிடிக்கக்கூடிய உலகின் முதலாவது மருத்துவ படவியல் ஸ்கேனர் உருவாக்கப்பட்டுள்ளது.
  • எக்ஸ்புளோரர் என அழைக்கப்படும் இக்கருவியானது,
    • அமெரிக்காவின் டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் மற்றும்,
    • ஷாங்காய்-ஐ அடிப்படையாகக் கொண்ட யுனைடெட் இமேஜிங் ஹெல்த்கேர் (UIH) ஆகியோரின் கூட்டிணைவால் உருவாக்கப்பட்டது.
  • இதில் தற்போதைய PET ஸ்கேனிங் முறையைவிட 40 மடங்கு குறைவான கதிரியக்க அளவில் ஸ்கேன் செய்ய முடியும்.

  • இது பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர் படவியல் மற்றும் X - கதிர் கணக்கீடு தளக்கதிர் படவியல் (CT) ஆகியவை இணைந்ததாகும். இந்த ஸ்கேனர் ஆனது முழு உடலையும் ஒரே நேரத்தில் படம் பிடிக்கக்கூடியது ஆகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்