சீனா உலகின் முதல் வணிக ரீதியான 10-ஜிகாபைட் (10G) அகலப்பட்டை சேவை வலை அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நிகழ் உலகச் சோதனைகளானது, வினாடிக்கு சுமார் 9,834 மெகாபைட்கள் (Mbps) வரையான பதிவிறக்க வேகம், 1,008 Mbps என்ற பதிவேற்ற வேகம் மற்றும் தேடுதலில் தாமதம் 3 மில்லி விநாடிகள் வரை என்ற அளவுகளில் பதிவாகின.
தென் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் மேம்பட்ட அகலப்பட்டை சேவை அமைப்புகளைப் பயன்படுத்தியுள்ளன.
ஆனால் மேற்கூறிய எதுவும் இன்னும் பொதுப் பயன்பாட்டிற்காக என நேரடியான 10G சேவைகளை அறிவிக்கவில்லை.