இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் 3D முறையில் அச்சிடப்பட்ட மனித கார்னியாக்களை உருவாக்கியிருக்கின்றனர். [3D முறையில் அச்சிடப்பட்ட கண்களின் மேலுள்ள மெல்லிய பாதுகாப்புப் படலம்]
இந்த கார்னியா கண்தானம் செய்பவர்களின் பற்றாக்குறையை சரி செய்வதோடு லட்சக்கணக்கான பார்வையற்றோர்களின் பார்வை திரும்பக் கிடைக்கவும் உதவிடும்.
அல்ஜினேட் மற்றும் கொலஜன் ஆகியவற்றை இணைத்து உருவாக்கியுள்ள ஆரோக்கியமான கார்னியல் ஸ்டெம் கொண்ட பயோ-இங்க் கலவையைப் பயன்படுத்தி இந்த 3D அச்சிடப்பட்ட மனித கார்னியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.