"நெங்சு-1" எனப்படும் 300 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் சிறு அழுத்தப் பட்ட காற்று ஆற்றல் சேமிப்பு (CAES) நிலையமானது சீனாவில் முழு திறன் கொண்ட மின் பகிர்மானக் கட்டமைப்பு இணைப்பை அடைந்துள்ளது.
ஒற்றை-அலகு மின்சாரம், ஆற்றல் சேமிப்பு அளவு மற்றும் ஆற்றல் மாற்றத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் மூன்று உலக சாதனைகளை படைத்து உள்ளது.
CAES என்பது குறுகிய கட்டுமானக் காலங்கள், அதிக மின் உற்பத்தி, நீடித்த காலம், பாதுகாப்பு மற்றும் நீண்டச் செயல்பாட்டுக் காலம் போன்ற நன்மைகளைக் கொண்ட ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகும்.