TNPSC Thervupettagam

உலகின் முதல் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இளம் பவளப் பாறைகள்

January 12 , 2025 4 days 65 0
  • உலகின் முதல் அதிகுளிர்வூட்டப்பட்ட காப்பு முறையில் உருவாக்கப்பட்ட பவளப் பாறைகள் பெருந்தடுப்புப் பவளப்பாறை திட்டுகளில் உள்ள புதிய மற்றும் மிகவும் இயற்கையான பகுதிகளில் வெற்றிகரமாக நிலை பெற்றுள்ளன.
  • அவை மிகவும் அதிகுளிர்வூட்டப்பட்ட காப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப் படுகின்றன என்பதோடு இந்தச் செயல்முறையில் பவள செல்கள் மற்றும் திசுக்கள் மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கப் படுகின்றன.
  • அதிகுளிர்வூட்டப்பட்ட காப்பு நுட்பமானது, உறைவிக்கப்படும் போது செல்களிலிருந்து தண்ணீரை அகற்றவும், அந்த உறைபனிகள் உருகும்போது செல் கட்டமைப்புகளுக்குத் தேவையான ஆதரவுகளை வழங்கவும் அதிகுளிர்வூட்டப்பட்ட காப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறது.
  • பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக ஆண்டுதோறும் வெப்பத்தைத் தாங்கும் மில்லியன் கணக்கான பவளப் பாறைகளை நிலை நிறுத்தச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்