சீன அறிவியல் ஆய்வாளர்கள் மிக அதிக உயரங்களில் பறக்கும் விமானங்களைக் கூட கண்டறியும் திறன் கொண்ட உலகின் முதலாவது கடல் படுகை 'ரேடாரை' உருவாக்கி உள்ளதாகக் கூறுகின்றனர்.
இது சீனாவின் உளவு /புலனாய்வு வலையமைப்பை மிகவும் கணிசமாக மேம்படுத்தி எதிர்காலத்தில் கடற்படை சார்ந்த அதன் போர்த் திறனை மறுவடிவமைக்க கூடும்.
இது 1,000 மீட்டர் ஆழத்தில் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்ட ஓர் ஒலி உணர்வு தொடர் ஆகும்.
இது சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் ஒரு நிலையான இறக்கை கொண்ட ஒரு விமானத்தினைக் கண்டறிந்து கண்காணித்ததாகக் கூறப்படுகிறது.
சீனா ஏற்கனவே அமெரிக்காவின் ரேடாருக்குப் புலப்படாத F-22 ரக போர் விமானங்கள் உட்பட உலகளாவிய விமானங்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட ஒரு பெரும் செயற்கைக்கோள் வலையமைப்பை இயக்குகிறது.