அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் உலகின் முதல் உயிர் மின்னணு மருந்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த உயிர் மின்னணு மருந்தானது உடலில் பொருத்தக்கூடியது. இது நரம்பு மீளுருவாகத்தை வேகப்படுத்தக்கூடியது மற்றும் சேதமடைந்த நரம்புகள் குணப்படுவதை விரைவுபடுத்தக் கூடிய, தானே மட்கக்கூடிய கம்பியில்லா சாதனமாகும்.
இந்தக் கருவியானது இன்னும் மனிதர்களிடத்தில் சோதிக்கப்படவில்லை. ஆனால் விலங்குகள் (எலி) மீது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு நரம்பு காயமடைந்த நோயாளிகளுக்கு எதிர்காலத்தில் சிகிச்சையளிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.