கரீபியன் தீவான டொமினிகா நாடானது, பூமியின் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றான அழிந்து வரும் எண்ணெய் திமிங்கலத்திற்காக உலகின் முதல் பாதுகாக்கப் பட்ட கடல்சார் பகுதியை உருவாக்கி வருகிறது.
இந்த தீவு தேசத்தின் மேற்குப் பகுதியில் சுமார் 300 சதுர மைல்கள் வரையிலான (800 சதுர கிமீ) கடல்நீர் பரப்பானது, வளங்காப்பு பகுதியாகக் குறிப்பிடப்படும்.
டொமினிகாவைச் சுற்றியுள்ள கடல் பரப்பில் சுமார் 500க்கும் குறைவான எண்ணெய் திமிங்கலங்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் திமிங்கலங்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை குட்டி ஈனும்.
முந்தையக் காலங்களில், சுமார் 2 மில்லியன் எண்ணெய் திமிங்கலங்கள் பூமியின் ஆழ்கடல் நீரில் சுற்றித் திரிந்த நிலையில் தற்போது சுமார் 800,000 திமிலங்களே மீதம் உள்ளன.