தெற்கு சீனாவின் தைஷானில் உள்ள மூன்றாம் தலைமுறை ஐரோப்பிய அழுத்த உலையானது (European Pressurised Reactor- EPR) தனது முதல் அணுசக்தி சங்கிலித் தொடர் செயல்வினையை மேற்கொண்டுள்ளது.
இந்த தைஷான் அணுசக்தி நிலையத்தின் முதல் யூனிட்டானது முதல் முறையாக நீடித்த சங்கிலித் தொடர் செயல்வினையை அடைந்துள்ளது. இதன் மூலம் செயல்பாட்டை துவங்குதல் எனும் மைல்கல்லை எட்டியுள்ள உலகின் முதல் ஐரோப்பிய அழுத்த உலையாக இது உருவாகியுள்ளது.
பின்லாந்து மற்றும் பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய அழுத்த உலைகள் பின்னடைவை சந்தித்து வருகின்ற வேளையில் தைஷான் 1 உலையானது இத்தகு முதல் செயல்பாட்டுத் தொடக்கத்தை அடைந்துள்ளது.
தைஷான் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை சீனாவில் கட்டப்பட உள்ள ஐரோப்பிய அழுத்த உலை வடிவமைப்பு அடிப்படையிலான முதல் இரண்டு அணுசக்தி உலைகளாகும்.