TNPSC Thervupettagam

உலகின் முதல் கையடக்க அல்லது இடம்பெயரும் மருத்துவமனை

December 7 , 2023 227 days 191 0
  • ஆரோக்யா மைத்ரி எய்ட் கியூப் என்பது உலகின் முதல் கையடக்க மருத்துவமனையாகும்.
  • இது ஹரியானா மாநிலத்திலுள்ள குருகிராமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இது BHISHM (சஹ்யோக் ஹிதா மற்றும் மைத்ரிக்கான பாரத் ஹெல்த் முன்முயற்சி) என்ற திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
  • இதில் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உள்ள ஒரு மருத்துவமனையை விமானத்தில் ஏற்றி சென்று 72 கனசதுரங்களாக இணைக்கலாம்.
  • இந்த மருத்துவமனையின் மூலம் இயற்கைப் பேரழிவுகள் அல்லது நெருக்கடிகளின் போது 48 மணி நேரத்திற்குல் 200 உயிர் பிழைத்தவர்களை ஆதரிக்க முடியும்.
  • "ஆரோக்ய மைத்ரி கியூப்" என்பது "ஆரோக்ய மைத்ரி" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • இயற்கைப் பேரழிவுகள் அல்லது மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வளரும் நாட்டிற்கும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்