ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (United Nations Environment Programme - UNEP) கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை முழுவதும் சூரிய ஒளியினால் ஆற்றலளிக்கப்படுகின்ற உலகின் முதல் விமான நிலையமாக அங்கீகரித்துள்ளது.
இந்த விமான நிலையமானது 15 மெகா வாட் சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ளது.
Cochin International Airport Ltd (CIAL) விமான நிலையமானது பொது தனியார் கூட்டிணைவு மூலம் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாகும். இது 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இது கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும்.
ஆண்டிற்கு 5 மில்லியனுக்கும் மேல் விமானப் பயணிகளை கையாளும் நாட்டின் ஒரே PPP (Public Private Partnership) வகை விமான நிலையம் இதுவேயாகும்.