TNPSC Thervupettagam

உலகின் முதல் சூரிய ஒளி-விமான நிலையம்

June 1 , 2018 2240 days 720 0
  • ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது (United Nations Environment Programme - UNEP) கொச்சின் சர்வதேச விமான நிலையத்தை முழுவதும் சூரிய ஒளியினால் ஆற்றலளிக்கப்படுகின்ற உலகின் முதல் விமான நிலையமாக அங்கீகரித்துள்ளது.
  • இந்த விமான நிலையமானது 15 மெகா வாட் சூரிய மின்னாற்றல் உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ளது.
  • Cochin International Airport Ltd (CIAL) விமான நிலையமானது பொது தனியார் கூட்டிணைவு மூலம் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமான நிலையமாகும். இது 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் இது கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும்.
  • ஆண்டிற்கு 5 மில்லியனுக்கும் மேல் விமானப் பயணிகளை கையாளும் நாட்டின் ஒரே PPP (Public Private Partnership) வகை விமான நிலையம் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்