TNPSC Thervupettagam

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளர்

November 9 , 2018 2208 days 743 0
  • சீனாவின் உலக இணையதள மாநாட்டில், சீன அரசால் நடத்தப்படும் செய்தி நிறுவனமானது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தச் செய்தி வாசிப்பாளரானது உண்மையான செய்தி அறிவிப்பாளரான ஜாங் ஸோவோவை மாதிரியாகக் கொண்டது.
  • இந்தச் செய்தி வாசிப்பாளரால் நேரலை ஒளிபரப்பு படக்காட்சிகளிலிருந்து கற்றுக் கொண்டு ஒரு நாளின் 24 மணி நேரங்களுக்கு செய்தி வாசிப்பை வழங்க முடியும்.
  • இந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரானது உயிரற்ற ரோபோக்களை போன்ற உருவ அமைப்பில் அல்லாமல் உயிர் உள்ளது போன்றே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உண்மையான செய்தி தொகுப்பாளர்களைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்