TNPSC Thervupettagam

உலகின் முதல் திரவ நுண் யூரியா ஆலை

June 6 , 2022 777 days 599 0
  • குஜராத்தின் கலோல் நகரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் முதல் திரவ நுண் யூரியா ஆலையைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இது நுண் துகள் வடிவில் உள்ள யூரியா ஆகும்.
  • திரவ நுண் யூரியாவை நேரடியாக இலைகளில் தெளிப்பதால் அது நேரடியாகச் செடியால் உறிஞ்சப் படும்.
  • யூரியா ஒரு இரசாயன நைட்ரஜன் உரமாகும்.
  • இது தாவரங்களுக்கு மிகவும் தேவையான ஒரு முக்கிய ஊட்டமான நைட்ரஜனைச் செயற்கையாக வழங்குகிறது.
  • உலகிலேயே அதிகளவில் யூரியாவினைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா ஆகும்.
  • ஆனால் யூரியா உற்பத்தியில் மூன்றாவது இடத்திலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்