TNPSC Thervupettagam

உலகின் முதல் தொடர் சங்கிலி பத்திரம்

August 16 , 2018 2293 days 651 0
  • முழுவதும் சங்கிலித் தொடர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் முதல் பத்திரத்தை (Bond) உலக வங்கி விற்கவுள்ளது.
  • இந்த தொழில் நுட்பமானது நிலையில்லாத மற்றும் நம்பகத் தன்மை குறித்த சந்தேகத்திற்கிடமான, அதே போல் குற்றவியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பிட்காயின் போன்ற சங்கேத பணத்துடன் (Cryptocurrencies) தொடர்புடையதாகும்.
  • இந்த பரிமாற்றமானது ஆஸ்திரேலிய காமன்வெல்த் வங்கியுடன் இணைந்து உலக வங்கியின் கண்டுபிடிப்பு ஆய்வகத்தின் சிந்தனையில் உருவாக்கப்பட்டதாகும்.
  • இந்த சங்கிலித் தொடர் தொழில் நுட்பமானது வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதாகவும், இப்பத்திரங்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பதால் பத்திரத்திலிருந்து விரைவாக பணமாக மாற்றி பரிமாற்ற நேரத்தை குறைக்கவும் இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்