TNPSC Thervupettagam

உலகின் முதல் மணல் மின்கலன்

March 24 , 2023 485 days 299 0
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்துப் பெறப்படும் வெப்ப ஆற்றலைச் சேமித்து வைக்கக் கூடிய உலகின் முதல் மணல் மின்கலனைப் பின்லாந்து நிறுவி உள்ளது.
  • இது நகரின் மையப்படுத்தப்பட்ட வெப்ப ஆற்றல் சார்ந்த கட்டமைப்புடன் இணைக்கப் பட்டுள்ளதால் இது நகரத்தின் கட்டிடங்கள் மற்றும் பொதுக் குடிநீர் வழங்கீட்டு அமைப்புகளைச் சூடாக வைத்திருக்க உதவும்.
  • இந்தச் சேமிப்புக் கலனானது 100 kW வெப்பமாக்க ஆற்றல் மற்றும் 8 MWh திறன் கொண்டது.
  • "மணல் மின்கலன்" எனப்படும் இந்த உயர் வெப்பநிலை வெப்ப ஆற்றல் சேமிப்புக் கட்டமைப்பில் மணல் அல்லது மணல் போன்ற பொருட்கள் ஆனது சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
  • மணலானது இதில் வெப்ப ஆற்றல் சேமிப்பகமாகச் செயல்படுகிறது.
  • கூடுதல் காற்று மற்றும் சூரிய ஆற்றலுக்கான உயர் ஆற்றல் மற்றும் உயர் திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு அமைப்பாக செயல்படுவதே இதன் முதன்மை செயல்பாடு ஆகும்.
  • ஆற்றலானது வெப்பமாக மாற்றப்பட்டு, கட்டிடங்களை வெப்பப் படுத்த மற்றும் பிற பயன்பாடுகளுக்காகப் பயன்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்