TNPSC Thervupettagam

உலகின் முதல் மனித உருவ எந்திர விமானி

August 26 , 2023 458 days 296 0
  • தென் கொரிய அறிவியலாளர்கள் விமானத்தை இயக்கும் திறன் கொண்ட மனித உருவ எந்திரத்தினை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
  • PIBOT எனப்படும் இந்த எந்திரம், விமான நேர அட்டவணைகள் மற்றும் அவசரகால நெறி முறைகளை மனப்பாடம் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • இதில் ஒரு விமானத்தின் அமைப்புகள் மற்றும் பல்வேறு செயல்பாட்டுச் சூழ்நிலைகளை கண்காணிக்கும் திறன் கொண்ட பல ஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
  • PIBOT என்ற எந்திரமானது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) மற்றும் விமான கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள பிற மனிதர்களுடனும் தொடர்பு கொள்ள முடியும், அதாவது அது ஒரு தலைமை விமானி அல்லது தலைமை அதிகாரியின் வழிகாட்டுதல் மூலம் செயல்பட முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்