TNPSC Thervupettagam

உலகின் முதல் மாற்றுத் திறனாளி விண்வெளி வீரர்

December 9 , 2022 591 days 297 0
  • ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது உலகின் முதல் "மாற்றுத் திறனாளி விண்வெளி வீரரை" (பாராஸ்ட்ரோனாட்) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது மாற்றுத் திறனாளிகளை விண்வெளியில் பணியாற்றச் செய்வதற்கும், அங்கு வாழ்வதற்கும் வழி வகை செய்வதற்கான ஒரு முக்கியப் படிநிலையாகும்.
  • விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியின் போது மேற்கொள்ளப்படும் சாத்தியக்கூறு ஆய்வில் பங்கேற்பதற்கு பிரிட்டிஷ் மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் தடகள வீரர் ஜான் மெக்ஃபாலை அந்நிறுவனம் நியமித்தது.
  • எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விண்வெளி ஆய்வுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பதற்குத் தேவையான பணி நிலைகளை இது மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்