TNPSC Thervupettagam

உலகின் முதல் முழுமையான மின் சரக்கு கப்பல்

November 17 , 2017 2563 days 908 0
  • உலகின் முதல் முழுமையான மின்சார சரக்குக் கப்பலை சீனா தனது குவாங்டாங் (Guangdong) மாகாணத்தின் தலைநகரமான குவாங்ஜூவ்-வில் (Guangzhou)  தொடங்கியுள்ளது.
  • இரண்டாயிரம் மெட்ரிக் டன் எடை கொண்ட இந்த கப்பல் உலகில் லித்தியம் மின்கலத்தை (lithium battery) உபயோகிக்கும் முதல் கப்பலாகும்.
  • இந்த கப்பல் பியர்ல் நதியின் (Pearl River) உட்புற பகுதிகளில் மின் உற்பத்திக்கான நிலக்கரியை சுமந்து சென்றிட முதன்மையாக பயன்படும்.
  • இந்த கப்பல் குவாங்ஜூவ் சர்வதேச கப்பல் கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
  • இரண்டு மணி நேர எரியூட்டலுக்குப் பின் இந்தக் கப்பல் 80 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்யும்.
  • இந்த கப்பல் 70.5 மீட்டர் நீளமுடையது.
  • 40 புதிய மகிழுந்துகளின் (Cars) மின்கலத்தின் சக்திக்கு இணையான சக்தியாக இந்தக் கப்பலின் மின்கல சக்தி 2400 கிலோவாட் மணியாக உள்ளது.
  • இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 12.8 கிலோ மீட்டராகும்.
  • இதிலிருந்து வீணான வாயு மாசுக்கள் ஏதும் வெளியிடப்படுவதில்லை.
  • இந்த கப்பலின் முதன்மையான செலவு அதன் லித்தியம் மின்கலம் எந்தளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்