TNPSC Thervupettagam

உலகின் முதல் லேசர் ஆயுதம்

July 20 , 2017 2728 days 1454 0
  • அமெரிக்கா, உலகின் முதல் லேசர் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • லேசர் ஆயுத அமைப்பு (சுருக்கமாக - லாஸ்) (Laser Weapons System - LaWS) என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஆயுதம் பாரசீக வளைகுடாவில் இருக்கும் நிலம்-நீர் இரண்டிலும் பயணிக்கக் கூடிய யு.எஸ்.எஸ் பொன்சே (USS ponce) என்ற கப்பலில் நிறுவப்பட்டுள்ளது .
  • செயல்பாட்டு ரீதியாக, இது ஒரு லேசர் போலவே செயல்படுகிறது. போட்டான்கள் (Photons) வெளியிட தனியறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • முற்றிலும் அமைதியாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கும் இந்த லாஸ் லேசர் கற்றை, ஒளி வேகத்தில் பயணிக்கிறது (விநாடிக்கு 186,000 மைல் அல்லது வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்). அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (Inter-continental Ballistic Missile) விட 50,000 மடங்கு வேகமானது .
  • காற்றுவழி வரும் ஆபத்துகளை எதிர்கொள்வது மட்டும் அல்லாமல், நீர்வழி வரும் தாக்குதல்களையும் தாக்கி செயலிழக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது இந்த லாஸ் கட்டமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்