அமெரிக்கா, உலகின் முதல் லேசர் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
லேசர் ஆயுத அமைப்பு (சுருக்கமாக - லாஸ்) (Laser Weapons System - LaWS) என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஆயுதம் பாரசீக வளைகுடாவில் இருக்கும் நிலம்-நீர் இரண்டிலும் பயணிக்கக் கூடிய யு.எஸ்.எஸ் பொன்சே (USS ponce) என்ற கப்பலில் நிறுவப்பட்டுள்ளது .
செயல்பாட்டு ரீதியாக, இது ஒரு லேசர் போலவே செயல்படுகிறது. போட்டான்கள் (Photons) வெளியிட தனியறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் அமைதியாகவும் கண்ணுக்குத் தெரியாததாகவும் இருக்கும் இந்த லாஸ் லேசர் கற்றை, ஒளி வேகத்தில் பயணிக்கிறது (விநாடிக்கு 186,000 மைல் அல்லது வினாடிக்கு 300,000 கிலோமீட்டர்). அதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (Inter-continental Ballistic Missile) விட 50,000 மடங்கு வேகமானது .
காற்றுவழி வரும் ஆபத்துகளை எதிர்கொள்வது மட்டும் அல்லாமல், நீர்வழி வரும் தாக்குதல்களையும் தாக்கி செயலிழக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது இந்த லாஸ் கட்டமைப்பு ஆகும்.