TNPSC Thervupettagam

உலகின் முதல் வெப்ப மின்கல ஆலை

August 7 , 2018 2301 days 806 0
  • ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர்சந்திரபாபு நாயுடு அமராவதியில் உலகின் முதல் வெப்ப மின்கல ஆலையினைத் தொடங்கி வைத்தார்.
  • இது பாரத் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்ப தனியார் நிறுவனத்தினால் (Bharat Energy Storage Technology Private Limited - BEST) தயாரிக்கப்பட்டது.
  • இந்த வகையைச் சேர்ந்த மின்கலன்கள், ஆற்றல் உற்பத்திக்கான புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களை உயர்த்துதல் மற்றும் புதுப்பிக்க இயலா புதை படிம எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியினைச் சார்ந்திருத்தலை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கார்பன் வெளிப்படுதலை குறைக்க உதவும் இத்தொழில்நுட்பம் மின்சார விநியோக அமைப்பினை சமநிலைப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
  • அதிக ஆற்றல் அடர்த்தி சேமிப்பு (High Energy Density Storage - HEADS) என்றறியப்படும் இச்சாதனம் 2016-ல் டாக்டர் பட்ரிக் க்ளென் என்பவரால் கண்டறியப்பட்டு காப்புரிமை பெற்ற தொழில்நுட்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்