ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர்சந்திரபாபு நாயுடு அமராவதியில் உலகின் முதல் வெப்ப மின்கல ஆலையினைத் தொடங்கி வைத்தார்.
இது பாரத் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்ப தனியார் நிறுவனத்தினால் (Bharat Energy Storage Technology Private Limited - BEST) தயாரிக்கப்பட்டது.
இந்த வகையைச் சேர்ந்த மின்கலன்கள், ஆற்றல் உற்பத்திக்கான புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்களை உயர்த்துதல் மற்றும் புதுப்பிக்க இயலா புதை படிம எரிபொருள் அடிப்படையிலான ஆற்றல் உற்பத்தியினைச் சார்ந்திருத்தலை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கார்பன் வெளிப்படுதலை குறைக்க உதவும் இத்தொழில்நுட்பம் மின்சார விநியோக அமைப்பினை சமநிலைப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துவதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
அதிக ஆற்றல் அடர்த்தி சேமிப்பு (High Energy Density Storage - HEADS) என்றறியப்படும் இச்சாதனம் 2016-ல் டாக்டர் பட்ரிக் க்ளென் என்பவரால் கண்டறியப்பட்டு காப்புரிமை பெற்ற தொழில்நுட்பமாகும்.