ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (International Peace Research Institute-SIPRI) ஆனது உலகில் தங்களின் பாதுகாப்புக்கென அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த உலகின் முதல் ஐந்து இராணுவ செலவீட்டாளர்கள் குழுவில் (world’s five biggest military spenders) இந்தியா இணைந்துள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான பதற்றத்தினைத் தொடர்ந்து இந்திய அரசானது தன்னுடைய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை (operational capability) மேம்படுத்தியுள்ளது.
2017-ஆண்டு தன்னுடைய இராணுவத் துறைக்கு அதிகளவில் செலவு செய்த நாடுகளுள் அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இரஷ்யா ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.