உலகின் முன்னணி உற்பத்தியாளர், பயனர் மற்றும் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதியாளர் நாடாக தற்போது இந்தியா மாறியுள்ளது.
5,000 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கரும்பு இந்தியாவில் உற்பத்தி செய்யப் பட்டது.
சுமார் 3,574 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு சர்க்கரை ஆலைகளில் செயல்முறைக்கு உள்ளாக்கப் பட்டு சுமார் 394 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.
35 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு வழங்கப்பட்டது.
சர்க்கரை ஆலைகள் மூலம் 359 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டது.
இந்தியாவும் எந்த நிதி உதவியும் இல்லாமல் அதன் அதிகபட்ச ஏற்றுமதியான சுமார் 109.8 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதியினைப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு உயிரி எரிபொருளாக எத்தனாலின் வருகை சர்க்கரை ஆலைகளின் சிறந்த நிதி நிலைகளுக்கு வழி வகுத்தது.