S&P க்ளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான 250 முன்னணி உலக ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அரசிற்குச் சொந்தமான NTPC லிமிடெட் நிறுவனமானது, உலகின் முன்னணி சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் மற்றும் எரிசக்தி வர்த்தக நிறுவனமாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையானது, சொத்து மதிப்பு, வருவாய்கள், லாபம் மற்றும் முதலீட்டின் மீதான வருமானம் ஆகிய நான்கு முக்கிய அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.
தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சார ஆற்றலில் 24 சதவீத பங்களிப்பை NTPC வழங்குகிறது.
2050 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்தினை இந்த நிறுவனம் வழங்கும்.