TNPSC Thervupettagam

உலகின் மூன்றாவது பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் – இந்தியா

July 31 , 2017 2674 days 1063 0
  • அறிக்கையின் பெயர்: OECD-FAO வேளாண்மைக் கண்ணோட்டம் அறிக்கை 2016-2026.
  • அறிக்கையினை நடத்திய அமைப்புகள்:
    • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - The Food and Agriculture Organization of the United Nations (FAO)
    • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு - Organisation for Economic Co-operation and Development (OECD)
  • உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
  • இந்த நிலைப்பாட்டை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியா தக்க வைக்கும் என்று OECD-FAO வேளாண்மைக் கண்ணோட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு இந்தியா , சுமார்1.56 மில்லியன் டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு இந்திய93 டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து , உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 16 சதவீதம் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியின் வகைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டிற்கு அதிக அளவில் எருமை மாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது . நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் , எருமை மாடுகளின் ஏற்றுமதி பெரும்பங்கு வகிக்கின்றது.
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தரவுத்தளத்தின் படி, கடந்த ஆண்டில் இந்தியா 363,000 டன் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துள்ளது.
  • அதிக அளவில் மாட்டிறைச்சிஏற்றுமதி செய்யும் நாடுகளின் தரவரிசை:
    • பிரேசில்
    • ஆஸ்திரேலியா
    • இந்தியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்