TNPSC Thervupettagam

உலகின் வயதான சுமத்ராவின் ஒரங்குட்டான்

June 24 , 2018 2217 days 693 0
  • உலகின் பழமையான 62 வயதான சுமத்ராவின் ஒரங்குட்டான் ஆஸ்திரேலியப் பூங்காவில் மரணமடைந்தது. இது 54 வழித் தோன்றல்களை விட்டுச் சென்றது.
  • புவான் (Puan) எனும் பெயர் கொண்ட இந்த ஓரங்குட்டான் பெர்த் பூங்காவின் “பெரும் வயதான பெண்” என்று விவரிக்கப்படுகிறது. வயது சம்பந்தமான பிரச்சனைகளுக்காக அது கருணைக் கொலை செய்யப்பட்டது.
  • இது 1968-ஆம் ஆண்டு முதல் பூங்காவில் உள்ளது. இது 2016-ம் ஆண்டு அதன் இனத்திலேயே பழமையானதாக கின்னஸ் உலக சாதனையாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இது உயர் அச்சுறுத்தல் நிலையில் உள்ளது. இது அரிதாக 50 வயதை எட்டும்.
  • உலக வன உயிர் நிதியத்தின் (WWF-World Wildlife Fund for Nature) கணக்கீட்டின் படி சுமத்ராவின் ஒரங்குட்டான்கள் 14600 எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்