TNPSC Thervupettagam

குளோபல் ஃபயர் பவர் குறியீடு - 2017

March 9 , 2018 2326 days 686 0
  • 2017 ஆம் ஆண்டிற்கான குளோபல் ஃபயர் பவர் குறியீட்டின்படி (Global Fire Power Index-2017) உலகின் வலிமையான ராணுவங்கள் தரவரிசைப் பட்டியலில் 133 நாடுகளுள் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவின் பரம போட்டியாளரான பாகிஸ்தான் இப்பட்டியலில்  13வது இடத்தில் உள்ளது.
  • முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, இரஷ்யா, மற்றும் சீனா உள்ளது.
  • மேலும் இந்த அறிக்கையின் படி, பிரெஞ்ச், ஜெர்மன், இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல் ஆகியவை முதல் 15 இடங்களில், இந்தியாவிற்கு பின் நிலையில் உள்ளன.
  • ராணுவ ஆதாரங்கள் (Military resources), படை வீரர்கள் எண்ணிக்கை, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, இயற்கை வளங்கள், புவியியல் அம்சங்கள் உள்ளிட்ட 50 காரணிகளின் அடிப்படையில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இக்குறியீட்டிற்கான கணக்கீட்டில் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை. இருப்பினும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அல்லது சந்தேகத்திற்குரிய அணு ஆயுதங்களுக்கு மதிப்பீட்டு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்