அண்டார்டிக் பனிப்படலம் ஆனது, கட்டுப்படுத்த இயலாத ஒரு அளவிற்கு உருகுவதால் உலகின் வலுவான பெருங்கடல் நீரோட்டம் குறைந்து வருகிறது.
மேற்கிலிருந்து கிழக்கே அண்டார்டிகா முழுவதும் பாயும் இந்த அண்டார்டிக் ஆழ்கடல் நீரோட்டம் (ACC) என்பது, உலகளாவியப் பருவநிலை மற்றும் பெருங்கடல் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இங்கு பனி உருகுவதன் விளைவாக, தெற்குப் பெருங்கடலில் அதிக அளவு நன்னீர் பாய்வதால், அதன் உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி மாறுகிறது.
இந்த மாற்றங்கள் ஆனது, ACC உட்பட பெருங்கடல் நீரோட்டங்களின் இயக்கத்தைப் பாதிக்கின்றன.